தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் காலை 7.00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் முதல் நபராக நடிகர் அஜித் சுமார் வாக்கு செலுத்தினார். அப்போது ‘No Need' என அஜித்குமார் கூறியதாக தகவல் பரவியது.
இந்நிலையில் இதுதொடர்பாக அஜித் குமார் மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்தார்.
நடிகர் அஜித் குமார் ஆட்சி மாற்றம் தேவையில்லை என்று கூறியதாக பரவி வரும் தகவல் தவறானது. அவர் அப்படி எந்த கருத்தையும் வெளியிடவில்லை என்று அவர் தெரிவித்தார்.
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.