Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


லெபனான் மீதான தாக்குதல்: ஐநா பொதுச்செயலாளர் கடும் கண்டனம்



லெபனான் முழுவதும் இஸ்ரேல் நடத்திய பாரிய தாக்குதல்களை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

இந்தத் தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், பெருமளவிலானோர் காயமடைந்துள்ளனர்.

பொதுச்செயலாளர் சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவரது ஊடகப் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக், "பொதுமக்களின் உயிரிழப்புகளை பொதுச்செயலாளர் கடுமையாகக் கண்டிப்பதுடன், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பொதுமக்களின் மரணங்கள் குறித்து அவர் மிகுந்த கவலை கொண்டுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.

லெபனானில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த இராணுவ நடவடிக்கைகள், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கைக்கு "பாரிய அச்சுறுத்தலை" ஏற்படுத்துவதாகவும் பொதுச்செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார். உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மோதல்களை நிறுத்துமாறு அனைத்துத் தரப்பினரிடமும் அவர் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், இந்த மோதலுக்கு எந்தவொரு "இராணுவ தீர்வும்" கிடையாது என்பதையும் அந்த அதிகாரப்பூர்வ அறிக்கையில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.