Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


இலங்கை ஹஜ் யாத்திரிகர்களுக்கான புதியசேவை வழங்குநருடன் தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள் சந்திப்பு


சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத்அவர்கள், இவ்வருடம் மே மாதம் நடைபெறவுள்ள ஹஜ்காலத்தில் ஹஜ் கடமையை நிறைவேற்றவுள்ள 3,500 இலங்கை யாத்திரிகர்களுக்கான புதிய சேவை வழங்குநராகநியமிக்கப்பட்டுள்ள ரிஹ்லத் வ மனாபிஃ நிறுவனத்தின் மக்கா நகரிலுள்ள தலைமையகத்திற்குச் சென்று சந்திப்பொன்றை மேற்கொண்டார்.

 

இந்த விஜயத்தின் போது, தூதுவர் அவர்கள், அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) முஹம்மத் அல்-தைய்யப் அல்-குஸாமி அவர்களையும், குறிப்பாக மினா மற்றும் அரபா பகுதிகளில் ஹஜ்கிரியைகளுடன் தொடர்புடைய பல்வேறு சேவைகளுக்குப்பொறுப்பான அவரது குழுவினரையும் சந்தித்தார். இலங்கையாத்திரிகர்கள் ஹஜ் கிரியைகளை சீராகவும் திறம்படவும் நிறைவேற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

 

இந்த சந்திப்பின்போது, ரிஹ்லத் வ மனாபிஃ நிறுவனத்தின் திறன்கள் மற்றும் விரிவான அனுபவம் குறித்து தூதுவர் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டதுடன், இலங்கை யாத்திரிகர்களின் நலன் மற்றும் உரிய வசதிகள் வழங்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அத்துடன் இலங்கை ஹஜ் யாத்திரிகர்கள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் ஆன்மீக திருப்தி அளிக்கக்கூடியதுமான சூழலில் தங்களது மார்க்க கடமைகளை நிறைவேற்ற தேவையான அனைத்து ஏற்பாடுகளும் முன்கூட்டியே பூர்த்திசெய்யப்பட்டிருப்பதை உறுதி செய்ய, இருதரப்பும் நெருங்கிய ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதி அளித்தனர். 

 

ரிஹ்லத் வ மனாபிஃ நிறுவனம், சர்வதேச மற்றும் தனிநபர்யாத்திரிகர்களுக்கு சேவை வழங்குவதில் 40 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்டஅங்கீகரிக்கப்பட்ட சேவை வழங்குநராகும். இந்த நிறுவனம், தங்குமிடம், போக்குவரத்து, விருந்தோம்பல், சுற்றுலாமற்றும் லொஜிஸ்டிக் உள்ளிட்ட ஹஜ் தொடர்பான முன்னணிசேவை வழங்குநர்களுடன் ஒப்பந்த மற்றும் மூலோபாயஉறவுகளைப் பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.