Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


பேராதனை யக்கா பால நிர்மாணப் பணிகள் குறித்த நேரத்தில் முடிக்கப்படுமா?


பேராதனை 'யகா' பாலத்தின் (Yaka Palama) நிர்மாணப் பணிகளை நிர்ணயிக்கப்பட்ட திகதிக்குள் நிறைவு செய்ய முடியாது என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 


பாலத்தின் நிர்மாணப் பணிகள் சரியான முறையில் முன்னெடுக்கப்படாத காரணத்தினால், அது மீண்டும் பழுதடைந்த நிலையை எட்டியுள்ளதாக அந்தச் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: 

"டித்வா புயலுக்குப் பிறகு தற்போது மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. புகையிரத பாதைகளை முழுமையாக சீரமைக்கும் பணிகள் நாளுக்கு நாள் தாமதமாகி வருகின்றன. பேராதனைப் பாலத்தின் பணிகளை ஏப்ரல் 28ஆம் திகதிக்குள் நிறைவு செய்வோம் என அரசாங்கம் திகதி குறித்திருந்தது. ஆனால் தற்போது அதன் வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக அரசாங்கத்திற்கு ஆதரவான தொழிற்சங்கங்களை இணைத்துக்கொண்டு வேறுவிதமான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. 

ஆனால் உண்மை என்னவென்றால், பாலம் தற்போது மீண்டும் ஒருபுறமாக இழுப்பட்டுள்ளது. இது குறித்து யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை. கண்டியிலிருந்து தினசரி அரச மற்றும் தனியார் துறை வேலைகளுக்குச் செல்லும் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். கடந்த மூன்று மாதங்களாக உலப்பனை - நாவலப்பிட்டி இடையே ஒரு புகையிரதம் தரித்து நிற்கிறது. அதனை மிக எளிதாகக் கொண்டு செல்ல முடியும் என்ற போதிலும், திணைக்களம் அது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை" எனத் தெரிவித்தார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.