Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


லங்கா ஐஓசி நிறுவனம் வழங்கிய உறுதி

 


இலங்கையின் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், அதற்காக எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்பதாகவும் லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது. 


ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவித்த அந்த நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கே. ரகு இதனைத் தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்; 

"லங்கா ஐஓசி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் என்ற ரீதியில், எரிபொருள் விநியோகத்தை நாங்கள் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என்பதை மக்களுக்கு கூற விரும்புகிறேன். நாட்டிற்கு மிகவும் அவசியமான வலுசக்தி பாதுகாப்பை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். 

தற்போதைய நிலைமை மிகவும் சிறப்பாக இருப்பதாக நான் கூறவில்லை. எவ்வாறாயினும், நாட்டுக்குள் எரிபொருள் விநியோகத்தை சீராகப் பேணுவதற்காக லங்கா ஐஓசி நிறுவனமும் அரசாங்கமும் தங்களால் இயன்ற உச்சகட்ட முயற்சியை மேற்கொண்டு வருகின்றன. 

நாட்டின் முன்னேற்றத்திற்காக நாங்கள் தொடர்ச்சியாக எரிபொருளை விநியோகிப்போம்" எனத் தெரிவித்தார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.