Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


பேச்சுவார்த்தை தோல்வி, மீனவர் போராட்டம் தீவிரம்


ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் கரைவலை  மீனவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று (08) நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

 

உழவு இயந்திரங்களில் பொருத்தப்பட்ட வின்ச் இயந்திரங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் கரைவலை மீன்பிடி நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு கோரி, மீனவர் குழுவொன்று கடந்த 5 ஆம் திகதி இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்தது.

 

கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி செயலக அதிகாரிகளுடன் பல சந்தர்ப்பங்களில் கலந்துரையாடல்களை நடத்திய போதிலும், அவை தோல்வியடைந்த காரணத்தினால், இவ்வாறு தொடர்ச்சியாகச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.