ர்வதேச அளவில் புகழ்பெற்ற 'வேர்ல்ட் பிரஸ் போட்டோ' (World Press Photo) புகைப்படக் கண்காட்சி மீண்டும் இலங்கைக்கு வருகை தரவுள்ளது. இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நெதர்லாந்து தூதரகம், இலங்கை பத்திரிகை நிறுவனம் (Sri Lanka Press Institute) ஆகியவற்றுடன் இணைந்து இக்கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள சிறந்த செய்திப் புகைப்படக் கலைஞர்களின் திறமைகளையும், சமகால உலகின் முக்கிய நிகழ்வுகளையும் ஒரே இடத்தில் தரிசிக்கும் வாய்ப்பு இதன் மூலம் இலங்கை மக்களுக்குக் கிடைக்கிறது.

கொழும்பில் வன் கோல் ஃபேஸில் (One Galle Face) பெப்ரவரி 27 முதல் மார்ச் 8 வரையும் கண்டியில் சஹஸ் உயனவில் (Sahas Uyana) மார்ச் 13 முதல் மார்ச் 17 வரையும் நடைபெறவுள்ளது

Post a Comment

Previous Post Next Post

Find Us On Facebook