Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பு: 584 சந்தேகநபர்கள் கைது

 


பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் குற்றத்தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விசேட வேலைத்திட்டத்தின் கீழ் நேற்று (20) மாத்திரம் 29,165 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகத்தின் பேரில் 584 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் குற்றச் செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்ட 18 சந்தேகநபர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

அத்துடன், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 249 பேரும், திறந்த பிடியாணை  பிறப்பிக்கப்பட்டிருந்த 130 பேரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

மேலும், இந்த விசேட நடவடிக்கையின் போது மதுபோதையில் வாகனம் செலுத்திய 286 சாரதிகளும், கவனயீனமாக வாகனம் செலுத்திய 57 சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.