Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


வெடிகுண்டு அச்சுறுத்தல் பீதியை ஏற்படுத்தும் முயற்சியா?

 


கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிபொருட்கள் இருப்பதாகக் கிடைத்த தகவல், பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் முயற்சியாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 


இன்று (27) காலை விடுக்கப்பட்டுள்ள புதிய அறிவிப்பில், இத்தகவல் குறித்து கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கண்டி மாவட்ட செயலகத்தின் ஐந்து இடங்களில் குண்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்த அலுவலகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு நேற்று (26) செய்தி ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. 

இது தொடர்பாக கண்டி பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, கண்டி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், பொலிஸ் மோப்ப நாய் பிரிவு, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவு மற்றும் இராணுவத்தின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் வரவழைக்கப்பட்டு பாரிய தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. 

இந்தத் தேடுதல் நடவடிக்கைகள் 2025.12.26 அன்று காலை முதல் மாலை வரை மேற்கொள்ளப்பட்ட போதிலும், சந்தேகத்திற்கிடமான வெடிபொருட்கள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை. 

அதன்படி, இத்தகவலானது பொதுமக்களிடையே தேவையற்ற பதற்றத்தை உருவாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியாகவே கருதப்படுவதாகவும், இது தொடர்பில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொள்வார்கள் என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.