Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


வேட்பாளர்களின் விருப்பு இலக்கம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று


2020 பொதுத் தேர்தல் நடத்தப்படும் திகதி இந்த வாரத்தில் தீர்மானிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கம் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படும் என்றும் ஆணைக்குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேர்தல் தொடர்பாக சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார அறிவுறுத்தல்களை சட்டமாக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்கவிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார்.

உலக சுகாதார ஸ்தாபன உறுப்பினர்கள் மற்றும் மருத்துவ சங்க உறுப்பினர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இதன்போது தெரிவித்தார்.

பொதுத் தேர்தலை பிரச்சினையற்ற வகையில் நடத்துவது ஆணைக்குழுவின் நோக்கம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேர்தலுக்கான செலவு குறித்து கருத்து தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர், கொரோனா வைரஸ் தாக்கத்தின் முன்னர் தேர்தல் சேலவு சுமார் 700 கோடி ரூபாயென மதிப்பிடப்பட்டது.

தற்போது சுகாதார வழிகாட்டலுடன் நடத்துவதற்கு 900 கோடி ரூபா செலவாகக்கூடும் என்றும் தெரிவித்தார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.