கொள்ளுப்பிட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்ற உத்தரவு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதற்காக துமிந்த நாகமுவ உட்பட முன்னிலை சோஷலிச கட்சியியைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜோர்ஜ் ப்ளொய்ட் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில் கடந்த 25ஆம் திகதி ஜோர்ஜ் ப்ளொய்ட் என்ற கருப்பின இளைஞர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் விசாரிக்கப்பட்டார்.
அப்போது குறித்த பொலிஸ் அதிகாரி,அந்த இளைஞரை கீழே தள்ளி முழங்காலால் கழுத்தை மிதித்தார். இதில் ஜோர்ஜ் ப்ளொய்ட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனை அடுத்து அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.