– அஹமட் –
கொரோனாவினால் இறந்தவர்களின் உடல்கள் எரிக்கப்படத்தான் வேண்டும் என உத்தரவிட்டு, சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜயசிங்க, சுற்று நிருபம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.01 ஏப்ரல் 2020 எனும் திகதியிடப்பட்டு, சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜயசிங்கவின் கையெழுத்துடன், இந்த சுற்று நிருபம் வெளியாகியுள்ளது
கொரோனாவினால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் உயிரிழந்த நீர்கொழும்பைச் சேர்ந்த இஸ்லாமியர் ஒருவரின் உடல் தகனம் செய்யப்பட்டமை குறித்து முஸ்லிம்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்ப்புகளும் கண்டனங்களும் அடங்குவதற்குள், மேற்படி சுற்று நிருபத்தை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது
‘கொவிட் 19 தொற்று காரணமாக இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனை செய்தல் மற்றும் அகற்றுதல்’ எனத் தலைப்பிடப்பட்டு, இந்த சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
கொவிட் 19 காரணமாக ஏற்படும் மரணங்களை இந்த சுற்று நிருபம் 04 வகைப்படுத்தியுள்ளது.
அவை;
- கொரோன வைரஸ் பாதிப்பினால் ஏற்பட்டதென உறுதிப்படுத்தப்பட்ட மரணம்.
- கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்டதென சந்தேகிக்கப்படும் மரணம்.
- கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டமைக்கான சாத்தியமுள்ள மரணம்.
- கொரோனா தொற்றினால் மரணிப்பதற்கு சாத்தியம் குறைந்த, நிமோனியாவினால் ஏற்பட்ட மரணம்.
ஆகியவையே மேற்படி 04 வகைகளுமாகும்.
இந்த 04 வகை மரணங்களில் எது ஏற்பட்டாலும், அவ்வாறானவர்களின் உடல்கள் எரிக்கப்பட வேண்டுமென, அனில் ஜயசிங்க வெளியிட்டுள்ள சுற்று நிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்பான செய்திகள்:
01) கொரோனா தொற்றினால் இறந்த இஸ்லாமியரின் உடல் தகனம் செய்யப்பட்டமை தொடர்பில், முஸ்லிம்கள் கடும் விசனம்



No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.