Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


தொலைபேசி இணைப்புக்களை துண்டிக் வேண்டாம்! தொலைத் தொடர்புகள் ஆணைக்குழு கோரிக்கை

சேவைக்கட்டணங்கள் செலுத்தப்படாத கையடக்க தொலைபேசி மற்றும் நிரந்தர தொலைபேசி இணைப்புக்களை துண்டிக்காமல் தொடர்ந்தும் இயங்கசெய்ய, சேவைகளுக்கான நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொலைத் தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழு இந்த அறிவுறுத்தலை அனைத்து நிரந்தர தொலைபேசி மற்றும் கையடக்க தொலைபேசி வழங்குனர்களுக்கு விடுத்துள்ளது.

இதேவேளை சேவைக்கட்டணங்களை செலுத்தாதோருக்கு ஏப்ரல் மாதம் இறுதிவரை கால அவகாசம் வழங்கவேண்டும் என்றும் ஆணைக்குழு தொலைபேசி நிறுவனங்களை கேட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்செய்யப்பட்டுள்ளது.

இதனால் பலரும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையிலேயே, தொலைத்தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.