( ஐ. ஏ. காதிர் கான் )
ராகம மாவட்ட வைத்தியசாலையில் இயங்கி வந்த தொழுகை அறையை மீண்டும் திறப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு,
முன்னாள் அமைச்சரும் ஸ்ரீல.சு.க. பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபாவிடம், கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் விடுத்த கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு பெற்றுத்தருவதாக அவர் உறுதியளித்ததாக, சம்மேளனத் தலைவர் அஸ்லம் ஒஸ்மான் தெரிவித்தார்.
ஏப்ரல் 21, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களையடுத்து அன்று முதல் இன்று வரை ராகம வைத்தியசாலையின் தொழுகை அறை மூடப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் தீவிரவாதம் இல்லை. சுமூக நிலை தோன்றியுள்ளது. இந்நிலையில், குறித்த தொழுகை அறை விரைவில் திறக்கப்பட வேண்டும் என, பைஸர் முஸ்தபா எம்.பி. யிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
இதேவேளை, பல வருடங்களாக மூடப்பட்டுள்ள கிறேண்ட்பாஸ் மோலவத்த பள்ளிவாசல் தொடர்பிலும் அரசியல்வாதிகளிடம் பலவிடுத்தம் கோரிக்கை விடுத்தோம். விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி மொழிகள் வழங்கப்பட்டன. எனினும், அதற்கான தீர்வுகள் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை. ஆகவே, இப்பகுதி வாழ் மக்களின் நலன் கருதியும், இப்பள்ளிவாசலும் உடனடியாகத் திறக்கப்படல் வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை முன் வைத்துள்ளோம்.
இந்த இரு கோரிக்கைகளுக்கும் மிகத் துரிதமாகத் தீர்வு பெற்றுத் தருவதாக, பைஸர் முஸ்தபா எம்.பி. எம்மிடம் உறுதியளித்திருப்பதாகவும், சம்மேளனத் தலைவர் அஸ்லம் ஒஸ்மான் மேலும் சுட்டிக்காட்டினார்.

No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.