Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


பிஸ்ரினுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் பொன்னாடை அணிவித்து கௌரவமளித்தது.

யூடிவின் தொகுப்பாளரும், தயாரிப்பாளருமான சகோதரர் பிஸ்ரினுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் இன்று பொன்னாடை அணிவித்து கௌரவமளித்தது.

கடந்த அரச தொலைக்காட்சி விருது விழாவில் இரண்டு விருதுகளை பெற்றுக் கொண்டமைக்காகவே போரத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரான பிஸ்ரினுக்கு இந்த கௌரவத்தை வழங்கியது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம் அமீன் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த டிசம்பர் மாதம் இந்த கௌரவ்விப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும் பிஸ்ரின் குறித்த தினத்தில் வெளிநாடு பயணமாகி இருந்ததால் இன்று நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் இந்த கௌரவம் வழங்கப்பட்டது.

யூடிவின் நடப்பு விவகாரம் மற்றும் அரசியல் துறைக்கான பிரதானியாக யூடிவியில் பிஸ்ரின் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும் இன்னும் பல வெற்றிகளை பெற kekirawa News இன்  வாழ்த்துகள்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.