கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி பாத்திமா ஷைரீன் இனாம் மௌலானா, சர்வதேச விஞ்ஞான ஆராய்ச்சி போட்டியில் பங்குபற்றுவதற்காக எதிர்வரும் ஞாயற்றுக்கிழமை (12) இந்தோனேசியா பயணமாகிறார்.
கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தேசிய விஞ்ஞான மன்றத்தினால் கொழும்பில் நடாத்தப்பட்ட அகில இலங்கை ரீதியான விஞ்ஞான ஆராய்ச்சி போட்டியின் இறுதிச்சுற்றில் பங்குபற்றி, முன்னிலைக்கு வந்த இம்மாணவி, அதன் பிரகாரம் எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை இந்தோனேசியாவின் ஜாவா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள சர்வதேச விஞ்ஞான ஆராய்ச்சி போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் கல்வி கற்கின்ற பாத்திமா ஷைரின், கடந்த 2012ஆம் ஆண்டு தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்திருந்ததுடன் 2018ஆம் ஆண்டு ஜீ.சி.ஈ.(சா/த) பரீட்சையில் 09 ஏ சித்திகளைப் பெற்றிருந்தார்.
இணைப்பாடவிதான செயற்பாடுகளில் மிகவும் திறமை காட்டி வருகின்ற இவர் தமிழ் தினம், ஆங்கில தினம், மீலாதுந் நபி விழா உள்ளிட்ட அனைத்து போட்டி நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றி, தேசிய, மாகாண மட்டங்களில் முதலிடம் பெற்றுள்ளதுடன் இம்முறை தேசிய மீலாத் விழாவை முன்னிட்டு முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட ஆங்கில மொழிமூல பேச்சுப் போட்டியில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.
இத்தகைய பல்துறை சாதனைகளுக்காக இம்மாணவி அண்மையில் கல்லூரி சமூகத்தினரால் 'துர்ரதுல் மஹ்மூத்' (விலைமதிப்பற்ற முத்து) எனும் பட்டம் மற்றும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார்.
இவர் கல்முனை கடற்கரைபள்ளி வீதியை சேர்ந்த இனாம் ஷக்காப் மௌலானா மற்றும் மௌலவி அப்துல் கனி மஜ்மலா தம்பதியரின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.