பாறுக் ஷிஹான்
சிலோன் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் 'குட்பாய் - 2019, ஹலோ 2020! வர்ண இரவு நிகழ்வு (Goodbye - 2019, Hello 2020! Colors Night) சனிக்கிழமை(28) இரவு 8.00 மணிக்கு சாய்ந்தமருது-மாளிகைக்காடு பாவா றோயல் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ.மஜீத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம் ஹரீஸ் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன்
உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் ,அரச உயர் அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள்,தொழிலதிபர்கள், வர்த்தக பிரமுகர்கள்,ஊடகவியலாளர்கள்,கலை ஞர்கள், கவிஞர்கள், என பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் முன்னிலைப் பேச்சாளராக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அரசியல் துறைத் தலைவர் கலாநிதி எம்.எம்.பாஸில் கலந்து கொண்டு 'சமகால ஊடக அரசியலில் சிறுபான்மை அரசியல் கட்சிகளின் வகிபாகம்' எனும் தலைப்பில் விசேட உரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் கலை, கலாச்சார நிகழ்வுகள்,நகைச்சுவை, ஓரங்க நாடகம், கவியரங்கு, விவாத மேடை,இஸ்லாமியக் கீதம் போன்ற பல்வேறு சுவார்சியமான நிகழ்ச்சிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது சிலோன் மீடியா போரத்தின் அங்கத்தவர்களுக்கு புத்தாண்டுப் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டதுடன் போரத்தின் மீடியா விபரத்கொத்தும் வெளியிடப்பட்டது.
இதில் போரத்தின் பொதுச் செயலாளர் ஏ.எஸ்.எம்.முஜாஹித், பொருளாளர் நூறுல் ஹூதா உமர், உப தலைவர் எஸ்.அஷ்ரப்கான் பிரதி தேசிய அமைப்பாளர் அதிபர் எம்.ஐ.எம்.றியாஸ், உப செயலாளர் எம்.எம்.ஜபீர், செயற்குழு உறுப்பினர் ஏ.எம்.றின்ஸான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.