Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


கோத்தாவின் கூட்ட மேடைகளில் சுதந்திர கட்சி ஏறாது என்கிறார் தயாசிறி


எ.எம்.றிசாத்-

யாரை ஆதரிப்பது என்ற குழப்பநிலையில் சுதந்திர கட்சியின் பாராளுமன்ற குழு கோத்தாவை ஆதரிக்கும் முடிவை அறிவித்துள்ளது. இந்த நிலையில் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் கோதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும்  கூட்டமேடைகளில் ஏறும் போது ராஜபக்ச ஆதரவாளர்கள் கூச்சல் போட்டு பேசவிடாமல் சுதந்திரக்கட்சி உறுப்பினர்களை தடுக்கின்றனர்.

இந்த கூச்சல் காரணமாக சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது எந்த மேடை ஏறுவது தொடர்பாக ஏனைய அரசியல்வாதிகளால் நகைப்புரியதாக பார்க்கப்படுகிறது.இதற்கு முதன்முதலில் முகம்கொடுத்தவர் துமிந்த திசாநாயக்க அதேபோல் இன்னும் பல சுதந்திரக்கட்சியின் முக்கியஸ்தர்களும் முகம்கொடுத்துள்ளனர்.

எனவே இதற்கு பிறகு கோத்தாவின் கூட்டங்களில் ஏறுவதா இல்லையா என்ற நிலையில் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் கோட்டாவின் கூட்டத்தில் ஏறப்போவது இல்லை என்ற கருத்தினை சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி வெளியிட்டுள்ளார்.

கோத்தாவின் பிரசார கூட்டத்தில் ஏறினாள் நாங்கள் அவர்களின் ஆதரவாளர்களுக்கு அஞ்சி கோட்டாவின் எடுபிடிகள் போல் செயற்பட வேண்டிய நிலை உள்ளதாகவும் தயாசிறி கருத்து வெளியிட்டுள்ளார்...

ராஜபக்சக்கள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் அப்படி எடுத்தாலும் தான் ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகள் முடியும் வரை கோட்டாவின் பிரச்சார மேடைகளில் ஏறப்போவது இல்லையென்றும் அவர் தெரிவித்தார்...

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.