Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


ACJUவின் முஸ்லிம்களுக்கான விசேட வேண்டுகோள்


தாய்நாட்டின் 7வது ஜனாதிபதியை தீர்மானிக்கும் தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றது. இதற்கு உதவியாக இருந்த இந்நாட்டு பிரஜைகள் அனைவருக்கும் ஜம்இய்யா நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது. இந்நாட்டு பிரஜைகளின் ஜனநாயக வாக்களிப்பால் திரு. கோதாபய ராஜபக்ஷ அவர்கள் வெற்றி பெற்று நேற்று திங்கட்கிழமை இலங்கை சோசலிஷ குடியரசின் 7வது ஜனாதிபதியாக உத்தியோகபூர்வமாக பதவிப்பிரமானம் செய்து கொண்டார். மேலும் சாதி, மத வேறுபாடின்றி தான் சேவை செய்யவுள்ளதாக தனது செய்தியில் குறிப்பிட்டார்.

நம் நாட்டின் புதிய ஜனாதிபதியாக நியமனம் பெற்ற திரு. கோதாபய ராஜபக்ஷ அவர்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளும் அதே நேரம் புதிய ஜனாதிபதி இந்நாட்டை வெற்றியின் பக்கமும், அபிவிருத்தியின் பக்கமும், இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை கட்டியெழுப்பி சுபீட்சத்தின் பக்கமும் கொண்டு செல்வார் என எதிர்பார்க்கின்றது.

எனவேஇ நாட்டு மக்கள் அனைவரும் குறிப்பாக முஸ்லிம்கள் அனைவரும் நாட்டின் அபிவிருத்தி, சமாதானம், சகவாழ்வு, பாதுகாப்பு என்பவற்றை மேம்படச்செய்ய  புதிய ஜனாதிபதியோடு கை கோர்த்து செயற்படுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கிறது.

அதே நேரம், இந்நாடு அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் அடைந்து சகல இன மக்களும் சமாதானத்துடனும் ஐக்கியத்துடனும் வாழ வேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரார்த்தனைச் செய்கின்றது.

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.