(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கொழும்பு சாஹிராவின் பழைய மாணவர்களினால் (OBA) ஏற்பாடு செய்யப்பட்ட 2019 ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப்போட்டி (15) கல்லூரியின் அதிபர் றிஸ்வி மரிக்கார் தலைமையில் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
கல்லூரியின் முன்னாள் அதிபர் ஜாவிட் யூசுப் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வெற்றிக் கேடயம் மற்றும் கிண்ணங்களை வழங்கி வைத்தார்.
போட்டியில் முன்னாள் செனட்டர் எஸ்.இஸட்.எம். மர்ஹும் மசூர் மௌலானா ஞாபகார்த்த (Grand Masters) சவால் கிண்ணத்தை (OBA) 70 அணியினர் தனதாக்கிக் கொண்டனர். அத்தோடு, பெறோஸ் இன்ஹாம் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்தை 2009 அணியினர் பெற்றுக் கொண்டனர்.
கல்லூரியின் அதிபர் றிஸ்வி மரிக்கார், ஆளுனர் சபையின் தலைவர் பௌசுல் ஹமீட், அக்ரம் மௌலானா, சியாம் மௌலானா, இல்ஹாம் மௌலானா, நௌஷாத் மௌலானா, ஷப்கி முஹம்மட், முஹம்மட் ஷஹ்ரப் ஆகியோர் இணைந்து வெற்றிபெற்ற வீரர்களுக்கு வெற்றிக் கிண்ணங்களை வழங்குவதைப் படங்களில் காணலாம்.


No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.