முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தனக்கு எய்ட்ஸ் தொற்று இருப்பதாகக் கூறி நீதிமன்றில் முன்னிலையாக முடியாது எனத் தெரிவித்ததாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என தெரிவிக்கப்படுகின்றது. தனக்கு எய்ட்ஸ் தொற்று இருப்பதாக நீதிமன்றில் முன்னிலையாக முடியாது என தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும் அந்த செய்தி சிலரால் எழுதப்பட்டுள்ள போலிச் செய்தி என தெரிவிக்கப்படுகின்றது. இது முற்றிலும் தவறான மற்றும் அடிப்படையற்ற ஒரு தகவலாகும்.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மீது மாத்தறை மற்றும் கோட்டை நீதிமன்றங்களில் சில நிதி முறைகேடு வழக்கள் விசாரணையில் உள்ளன. அவர் நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக ஆஜராகாததைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. அவரது தரப்பு வழக்கறிஞர்கள் அவர் வெளிநாட்டில் மருத்துவச் சிகிச்சை பெற்று வருவதாகவும், வேறு சில உடல் உபாதைகள் ளுஉயைவiஉய போன்ற முதுகுவலி சார்ந்த பிரச்சினைகள் காரணமாக விமானத்தில் பயணிக்க முடியாது எனவும் மருத்துவ அறிக்கைகளை மட்டுமே சமர்ப்பித்துள்ளனர்.
எய்ட்ஸ் தொற்று இருப்பதாக அவர் கூறியதாக சமூக வலைத்தளங்களிலோ அல்லது பிரதான செய்தி ஊடகங்களிலோ எந்தச் செய்தியும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.