யார் இந்த ரிஷாட் பதியூதீன்?

இவரைப் பற்றி பேசுவதற்கும் தெரிந்து கொள்வதற்கும் அப்படி என்ன இருக்கிறது? நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் இன்று பெரும் ஆழமரம் ஒன்றை வீழ்த்த நினைக்கிறது!? இதனை சுருக்கமாக கூறப்போனால் நேற்று வந்த அலையில்  ஒதுங்கிய ஒரு சருகு அவர்!?

ஒருவரை விமர்சனம் செய்வதற்கு முன்னால் அவரின் வரலாறுகளைப் பாருங்கள்!? இது அரசியல் விடயம் என்பதால் பிரதி அமைச்சருக்கு அரசியலில் ஒரு துளியேனும் முதிர்ச்சியே இல்லை!? என்பது யாதார்த்தமான விடயமாக மாறி விட்டது! அன்று தான் அகதியாக வெளியேறியபோது, தானும் தன்னை சுற்றி இருந்தவர்களும் துன்பத்திற்கு உள்ளான போது, வாய் விட்டு சொல்ல முடியாத வலிகளை தாங்கிக் கொண்ட போது, தூர நோக்கும், சமூக சிந்தனையும், ஆன்மீக சிந்தனைகயும் உள்ள ஒர் இளைஞன் அரசியலிற்கு வருகை தந்தான். அந்த இளைஞன் தான் வடக்கிற்கும் கிழக்கிற்கும் கிடைத்த ஒரு தலைவன் ரிஷாட் பதியூதீன். தன்னுடைய அதிகமான காலம் துன்பத்திற்கே உள்ளானார்!? சமூகத்திற்காக ஒரு குடும்பே சிறை சென்றுள்ளது என்றால் அது மிகையாகாது!,அவரின் விடுதலைக்காக ஒரு நாடே துஆ செய்துள்ளது என்றால் அது மிகையாகாது!  இன்று அவரால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள்  மிக நீண்ட வரலாறு அது!?

1.மழைக்காலங்களில் ஓட்டை வீட்டிலும்.

2.இரவு நேரங்களில் தாங்கள் வசிக்கும் பகுதி 

ஒரு கொடூரமான காடு போலவும்.

3.சமூகத்திற்கு யார் குரல் கொடுக்க உள்ளார்கள் எனும் போதும்?

4.கற்பதற்குப் பாடசாலை இல்லாத போதும்.

5.பயணிப்பதற்குப் பாதை இல்லாத போதும்.

6.இறை வணக்கத்தில் ஈடுபட வணக்கஸ்தலம் இல்லாத போதும்.

7.உண்பதற்கு உணவு இல்லாத போதும்.

8.திறமைகளை வெளிக்காட்ட மைதானம் இல்லாத போதும்.

9.திகண,அம்பாறை கலவரங்களின் போதும்

10.மக்கள்வெளியேற்றப்பட்ட போதும்

(இன்னும் மறைமுகமாகவும்,பகிரங்கமாகவும் கூற அதிகம் உள்ளது)

இனம்,மதம்,மொழி, பிரதேச வாதம் என ஒரு துளியேனும் பார்ப்பதே இல்லை!? அத்தனையையும் விமர்சனத்தையும் தாங்கிக் கொண்டு அவர் செய்து காட்டினார். புத்தளம்-மன்னார் வீதி இப்போதும் கூட  ரிஷாட் பதியூதீன் என்றும் அமைச்சர் தான் தற்போது புத்தளம்-மன்னார் வீதி விவகாரம் சூடு பிடித்துள்ளது.  தலைவர் ரிஷாட் பதியூதீன், அமைச்சர் பிமல் ரத்னாயக்க மற்றும் பிரதி அமைச்சர் முனீர் முளப்பருக்குமிடையில் கொந்தளிப்பன விவாதங்கள் சென்று கொண்டிருக்கின்றன. 

இந்த நேரம் கூட மன்னார்-புத்தளம் பாதையை திறப்பதற்கு முயற்சி செய்கிறார் ரிஷாட் இது 100km இற்கும் மேற்பட்ட நீளமுடைய பாதை. இதனை நிறுவ பல பில்லியன் தேவை. அரசிடம் பணம் இல்லாத காரணத்தால் தான் அதனை சிறப்பாக செய்து முடித்தார் இதன் மூலம் 100km பயண தூரம் குறைவடைந்துள்ளது. இது இலங்கையின் வரலாற்றில் பொன் எழுத்தால் பதிவு செய்ய வேண்டும் கடந்த பல அரசுகள் இனவாதத்தால் உருவாக்கப்பட்டவை. அந்த இனவாத அரசிலேயே தலைவர் இந்தளவு பாரிய அபிவிருத்தி பணியை மேற்கொண்டுள்ளார்.  எனினும் இந்த விடயத்தில் தலைவரின் ஆளுமையை யாராலும் மதிப்பிட முடியாது அது திறக்கப்படும் என்ற அதிகமான நம்பிக்கையையுடன்

நான் அம்ரி அஹமட் 

Post a Comment

Previous Post Next Post

Find Us On Facebook