ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் கலந்துரையாடியுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் கபீர் ஹாஷிமின் மகளின் திருமணம் கொழும்பில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம் பெற்றது. இதன்போதே இவர்கள் ஒரே மேசையில் இருந்து சந்தித்துள்ளனர்.
இந்தச் சந்திப்பின்போது இவர்களின் கலந்துரையாடல்அரசியல் சார்ந்ததாக இருந்ததாகத் தெரியவருகின்றது.
ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவு குறித்து மற்றுமொரு மேசையில் பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கின்றது.
ரஞ்சன் தொடர்பிலான பேச்சுவார்த்தை தொடர்ந்தால், அது குடும்பங்களுக்குள் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் என்றும், பின்னர் குடும்பப் பிரச்சினைகளை அரசாங்கம் தீர்க்கவே காலம் சென்றுவிடும் என்றும் ரணில் விக்கிரமசிங்க சிரித்தபடி கூறியுள்ளார்.

No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.